தஞ்சாவூர் மாவட்டம் பழனிக்கோட்டையை சேர்ந்தவர் டிம்பிள்சியா (26). இவர் சேலத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவருக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசையை தூண்டியிருக்கிறார். அதுவரை நம்பிக்கையாக பேசி வந்த டிம்பிள்சியாவின் வார்த்தைகளில் சரிந்த லோகேஸ்வரன், எப்படியாவது விமான நிலையத்தில் வேலை கிடைத்தால் போதும் நம்முடைய வாழ்க்கை மாறிவிடும் என நினைத்திருந்தார்.
வேலை அமைத்து தர செலவாகும் என்று லோகேஸ்வரனிடம் இருந்து டிம்பிள்சியா, 5.50 லட்சம் வரை பெற்றுள்ளார். இதையடுத்து லோகேஸ்வரனின் நெருங்கிய நண்பர்களும், தங்களுக்கும் வேலை வேண்டுமென தலா 5.50 லட்சம் கொடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் போலி ஏஜென்சிகளின் வழியில் தனி ஒரு பெண்ணாக இருந்து வாலிபர்களை