ஆதார் கார்டில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ரகசிய பாஸ்வேர்ட் (OTP) மூலம் தகவல்களை உறுதிசெய்தால் போதும்.
ஆன்லைன் வழிமுறையில் உடனடியாக பான் கார்டுகளை வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த முறையில் பெயர், முகவரி, தந்தை பெயர், பிறந்த தேதி போன்றவை ஆதார் மூலம் உடனடியாக ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படுகிறது. எனவே எந்த ஆவணங்களையும் அப்லோடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
பான் கார்டு உருவாக்கப்பட்டதும் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட ஈ-பான் கார்டு, க்யூ.ஆர். கோடுடன் கிடைக்கும். க்யூ-ஆர். கோடு மோசடி வேலைகளுக்கு உதவாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என இது பற்றி அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.