சிவகங்கை: மிளகாய் விவசாயிகளை அழவைத்த கனமழை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி வட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் அதிகமான மழைநீர் தேங்கியதால் மிளகாய் செடிகள் அழுகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 


நல்ல விளைச்சல் தரும் மிளகாய் பயிர்



இளையான்குடி, சோதுகுடி, கண்ணமங்கலம், குறிச்சி, பிராமணகுறிச்சி, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுடி நடைபெறுகிது. தண்ணீரின் தேவை குறைவு; குறைவான நோய்த் தாக்குதல்; ஒரு முறை பயிரிட்டால் 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை அறுவடை செய்யலாம்; போன்ற காரணங்களல் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் பயிரிடுகின்றனர்.



 


கனமழையால் பயிர்கள் கடும் சேதம்


அக்டோபர் மாத இறுதியில் பயிரிடும் விவசாயிகள் டிசம்பர் மாத இறுதியில் அறுவடை செய்வதும், நாற்றங்கால் அமைத்து மிளகாய்ச் செடிகளைப் பறித்து அதன் பின்னர் நடவு செய்வது வழக்கம். இந்த ஆண்டும் விவசாயிகள் குண்டு மிளகாயை சாகுபடி செய்திருந்தனர். ஒன்றரை மாதத்தில் செடிகள் வளர்ந்து பூப்பூக்க ஆரம்பித்திருந்த நிலையில் கனமழை காரணமாகப் பூக்கள் உதிர்ந்து விட்டன. இப்பகுதி மண் பிடிமானம் இல்லாமல் உள்ளதால் மழை காரணமாக தொடர்ந்து தண்ணீர் தேங்கியதால் செடிகள் அனைத்தும் சாய்ந்து விழுந்து விட்டன.