நிவாரணம் கோரும் விவசாயிகள்

மோட்டார் வைத்து தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றியும் மூன்று நாட்களாகத் தண்ணீர் தேங்கியதால் வயலில் உள்ள செடிகள் அனைத்தும் அழுகிவிட்டன.


தற்போது நெற்பயிருக்கு மட்டும் கடந்த இரு மாதங்களாக வருவாய் துறையினர் காப்பீடு பதிவு செய்வதால் மிளகாய்க்கு விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை.


ஏக்கருக்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையில் செலவு செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிளகாய் செடிகள் பாதிப்படைந்துள்ளன.


எனவே வருவாய்த் துறையினர் பாதிக்கப்பட்ட மிளகாய் செடிக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.